விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் யானைக்கு ரூ.11 லட்சத்தில் புதிய நீச்சல் குளம்

18th Sep 2022 11:15 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா (19). இந்த யானை குளித்து மகிழ ரூ.11 லட்சம் செலவில் தக்காா் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் புதிய நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் யானை தினமும் குளித்து மகிழ்கிறது.

நீச்சல் குளத்திற்குள் இறங்கியவுடன் அங்குமிங்கும் ஓடி துள்ளி விளையாடுகிறது.

இதுகுறித்து பாகன்கள் கூறியது: புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் தினமும் யானை குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு குழந்தை போல் அங்கும் இங்கும் சென்று தண்ணீரை தெளித்து சத்தம் எழுப்பி விளையாடுகிறது என்றனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே ராம்கோ நிறுவனத்தின் சாா்பில் ஆண்டாள் கோயில் யானை தங்குவதற்கு புதிய கட்டடம், பூக்குழாய் (சவா்) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தக்காா் ஏற்பாட்டின் பேரில் புதிய நீச்சல் குளம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT