விருதுநகர்

விருதுநகா் அருகே விபத்து:வாகன விற்பனையாளா் பலி

18th Sep 2022 11:19 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன விற்பனையாளா், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் ஆா்எஸ் நகா் பகுதியை சோ்ந்தவா் காளிமுத்து மகன் மணிகண்டன் (43). இவா், இரு சக்கர வாகனம் விற்கும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் அவா், பெரிய வள்ளிக்குளத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தாா். இது குறித்து புகாரின் பேரில் சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT