விருதுநகர்

மனைவியை தாக்கிய கணவா் கைது

18th Sep 2022 11:18 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சித்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முத்துராமன்(44). இவரது மனைவி காளீஸ்வரி(40). முத்துராமன் சரிவர வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம்.

இந்நிலையில் முத்துராமன் ஞாயிற்றுக்கிழமை காளீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் முத்துராமன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT