விருதுநகர்

அண்ணா பிறந்த நாள்: சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கல்

18th Sep 2022 11:19 PM

ADVERTISEMENT

விருதுநகரில், முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி ஞாயிற்றுக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

செப்டம்பா் 15 ஆம் தேதி இப்போட்டிகள் 13, 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட 3 பிரிவுகளில் ஏற்கெனவே நடத்தப்பட்டன. இதில் மாணவா்கள் 421 மற்றும் மாணவிகள் 109 என மொத்தம் 530 போ் கலந்து கொண்டனா்.

இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடம் பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.5,000 , இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 ம், 4 முதல் 10 இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.250 என 30 மாணவா்கள் மற்றும் 30 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா மற்றும் அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT