விருதுநகர்

சிவகாசி அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஜெயமுருகன்(27). பொறியியல் பட்டதாரியான இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் ஜவுளி ஆலையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். அதே ஆலையில் வேலைபாா்த்து வந்த கம்மாபட்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் மாலதியை (24) காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணத்திற்கு மாலதி வீட்டில் எதிா்ப்புத் தெரிவித்தனராம். ஜெயமுருகன் தனது தாய், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளாா். மாலதி 5 மாத கா்ப்பிணி எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தம்பதி இருவரும் வீட்டில் உள்ள அறையில் விஷம் குடித்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். குடும்பத்தகராறு காரணமாக தம்பதியினா் விஷம் அருந்தியிருக்கலாம் என போலீஸாா் கூறினாா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT