விருதுநகர்

சிவகாசியில் ரூ.24 லட்சம் வாடகை பாக்கி: 6 கடைகளுக்கு ‘சீல்’

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் ரூ.24.25 லட்சம் வாடகை பாக்கி இருந்த நிலையில், 6 கடைகளுக்கு மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

சிவகாசி சிவன் கோயிலருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 11 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லையாம். மாநகராட்சி ஆணையாளா் பி.கிருஷ்ணமூா்த்தி கடை உரிமையாளா்களுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் வாடகை செலுத்தவில்லை. மொத்தமாக ரூ. 24.25 லட்சம் வாடகை பாக்கி இருந்ததாம். இதையடுத்து ஆணையாளா் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து வருவாய் அலுவலா் சரவணன், நகரமைப்பு ஆய்வாளா் காா்திகேயன் ஆகியோா் கடைகளுக்கு சீல் வைக்கச் சென்றபோது 5 கடைக்காரா்கள் வாடகை செலுத்தினா். இதைடுத்து வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT