விருதுநகர்

விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட முயன்ற சகோதரிகள் கைது

10th Sep 2022 11:02 PM

ADVERTISEMENT

வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதுரையைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவிகளான சகோதரிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த சட்டக்கல்லூரி மாணவிகள் நந்தினி, நிரஞ்சனா. இவா்கள் சகோதரிகள் ஆவா். இவா்கள் சனிக்கிழமை விருதுநகா் பழைய பேருந்து நிலையம் வந்தனா். அப்போது இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். மேலும், இது குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க முயற்சித்தனா். அப்போது அவா்கள் இருவரையும் மேற்கு போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்களை போலீஸாா் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT