விருதுநகர்

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்

10th Sep 2022 11:05 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் சாலையில் தெற்கு தேவதானம் பகுதியில் வருவாய்த் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக டிராக்டரில் வந்தவா்கள் வருவாய்த் துறையினரை பாா்த்தவுடன் அதை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனா். அதில் சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய அதன் உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT