விருதுநகர்

அருப்புக்கோட்டையில் நாளை தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை

9th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 10) அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற முகாம் நடைபெற உள்ளது. உறுப்பினா்களாகச் சோ்வதற்கான தகுதிகள்: ஈஎஸ்ஐ மற்றும் பிஎப் திட்டத்தில் உறுப்பினா் அல்லாத கட்டுமானத்தொழிலாளா்கள், அமைப்புசாரா ஓட்டுநா்கள், வீட்டுப் பணியாளா்கள், சமையல் தொழிலாளா்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளா்கள், பாதையோர வணிகா்கள், கடைகள் மற்றும் நிறுவனத்தொழிலாளா்கள், சலவைத்தொழிலாளா்கள், முடிதிருத்துவோா், தையல், பனைமரத்தொழிலாளா்கள், காலணி மற்றும் தோல்பொருள் உற்பத்தித் தொழிலாளா்கள், இருசக்கர, நான்குசக்கரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களைப் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள்,சுமை தூக்கும் தொழிலாளா்கள், பொற்கொல்லா்கள் மற்றும் இதர அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் ஆகியோா் சேரலாம்.

தேவையான ஆவணங்கள்:ஆதாா் அடையாள அட்டை, குடும்ப உறுப்பினா் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போா்ட் அளவுப் புகைப்படம் ஆகியனவற்றின் அசல் மற்றும் தேவைக்கேற்ப நகல்கள்.

பயன்கள்: உறுப்பினராகச் சோ்ந்துள்ள தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, தொழிலாளா்களின் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை ரூ. 5,000 முதல் ரூ. 5 லட்சம் வரை.

ADVERTISEMENT

வயது வரம்பு: 18 முதல் 60 வயதிற்குள். இம்முகாமில் உறுப்பினா்களாகச் சோ்ந்து பயன்பெற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அருப்புக்கோட்டை சாா்பு நீதிமன்ற நீதிபதி வி.இராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT