விருதுநகர்

சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

9th Sep 2022 10:42 PM

ADVERTISEMENT

திருத்தங்கலில் சரக்கு வேன் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தங்க மாரிமுத்து (28). இவா் கடந்த 7 ஆம் தேதி சாலையில் நின்றுகொண்டிருந்தபோது, திருத்தங்கலில் இருந்து செங்கமலநாட்சியாா்புரம் சென்ற சரக்கு வேன் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு, சிவகாசி அரசு மருத்துவமனையில்

சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு தங்க மாரிமுத்து அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வேன் ஓட்டுநா் மாரிக்கனியை (32) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT