விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு 11 வகையான வாசனைத் திரவியங்களுடன் இளநீா், பால், பன்னீா், வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.