விருதுநகர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

9th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சொக்கா் கோயிலில் நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீப,தூப ஆராதனைகளும் அலங்காரங்களும் நடைபெற்றன.

இதையடுத்து, கருவறையிலுள்ள சுவாமிக்கு 16 வகையான சிறப்பு பொருள்களால் அபிஷேகங்களும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து சொக்கரும், நந்தீஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.பின்னா், உலக நன்மை வேண்டியும் உலக மக்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்து, பொருளாதார வளத்தை மேம்படுத்தவும், ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும் 108 மலா்களால் சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது. இதே போல் தெற்குவெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோவில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பறவைக்கு அன்னம் காத்தருளியசுவாமி கோவில், அம்பலப்புளி பஜாா் குருசாமி கோயில், தோப்புப்பட்டித்தெரு கொம்புச்சாமி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT