விருதுநகர்

சதுரகிரி அடிவாரப் பகுதியில் வனத்துறை அமைச்சா் ஆய்வு

9th Sep 2022 10:40 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அடிவாரப் பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மின்சார வசதி இல்லாததால் மின்சார வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வந்துள்ளேன். தற்போது இந்த பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளதால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டி உள்ளது. அதிகாரிகளை இதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு செய்த பின் மின்சாரம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் பாலம் கட்டும் பணி குறித்து முறையான ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா நன்றாக உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT