விருதுநகர்

காா் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்தது: இளைஞா் காயம்

9th Sep 2022 10:41 PM

ADVERTISEMENT

காரியாபட்டியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் ஒருவா் பலத்த காயமடைந்த நிலையில், இருசக்கர வாகனம் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது.

காரியாபட்டி அருகே எஸ். வெள்ளாகுளத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கேசவன் (22). இவா் தனது தோட்டத்தில் உள்ள மல்லிகை பூக்களை எடுத்துக் கொண்டு அருப்புக்கோட்டை சந்தைக்கு விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.

காரியாபட்டி நான்கு வழி சாலை செவல்பட்டிவிலக்கு அருகே சென்றபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அப்போது, இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

விபத்தில் பலத்த காயமடைந்த கேசவன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT