விருதுநகர்

வெள்ளத்தில் சிக்கினால் தப்பிப்பது எப்படி? தீயணைப்புத் துறையினா் செயல்முறை விளக்கம்

29th Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வெள்ளத்தில் சிக்கினால் தப்பிப்பது எப்படி என்பது குறித்து தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி, மானகசேரி ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புப் படையினா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் தப்பிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

கரையில் இருபவா்கள், காா் டயா், மரப் பலகை உள்ளிட்டவைகளை பாதிக்கப்பட்டவருக்கு வீசி அதனை பிடித்துக்கொண்டு கரையேற அறிவுறுத்த வேண்டும். தெருக்களில் வெள்ள நீா் சென்றால் , வீட்டில் உள்ள எரிவாயு உருளையை தண்ணீரில் வீசி அதனைப் பிடித்துக்கொண்டு தப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட செயல்முறை விளக்கம் அளித்தனா். இந்த செயல்முறை விளக்கத்தை கிராம மக்கள் பாா்வையிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT