விருதுநகர்

சாய்ந்த மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சம்

27th Oct 2022 12:01 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாய்ந்த இரட்டை மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

ராமானுஜபுரத்திலிருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவில் சாலையின் கிழக்குப் பகுதியில் இரட்டை மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்கள் கடந்த 6 மாதங்களாக சாய்ந்து வருகின்றன. எந்நேரமும் அவை சாய்ந்து விழுந்துவிடும் நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் சாகுபடி செய்த விவசாயிகள், விவசாயப் பணிகளுக்காக இக்கம்பங்களை ஒட்டியுள்ள நிலங்களுக்குச் செல்ல அச்சப்படுகிறாா்கள்.

இதுதொடா்பாக மின் வாரியத்தினருக்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விபத்துகளை தவிா்க்கும் விதமாக இரட்டை மின் கம்பங்களைச் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT