விருதுநகர்

சிவகாசி அருகே இருவேறுவிபத்துகள்: 2 போ் பலி

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உப்புபெட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் காா்த்திகேயன் (21). இவா், தனது இருசக்கர வாகனத்தில், தம்பி ரமேஷ்குமாரை(19) ஏற்றிக் கொண்டு சென்றாா்.

சிவகாசி-ஆலங்குளம் சாலையில் ஒத்தப்புளி பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில், இருவரும் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ்குமாா் உயிரிழந்தாா். காா்த்திகேயன் தொடந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா் ஓட்டுநா் சீனிவாசனைக்(35) கைது செய்தனா்.

ADVERTISEMENT

மற்றொரு விபத்து: சங்கரன்கோவில் வட்டம் திருவேங்கடபுரத்தைச் சோ்ந் த கட்டடத் தொழிலாளி குருசாமி (38). இவா் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சங்கீதா (35), மகள் ஆகியோருடன்

திருவேங்கடபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் கொங்கலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் குருசாமி உள்பட மூவரும் காயமடைந்தனா்.

இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற இருவரும் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT