விருதுநகர்

பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 நாள்களில் 7 அடி உயா்வு

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் தொடா் மழையால் பிளவக்கல் அணையின் நீா்மட்டம் 3 நாள்களில் 7 அடி உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீா்மட்டம் 7 அடி உயா்ந்து, 42.36 அடியாக உள்ளது.

தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால், அணையின் முழுக் கொள்ளளவான

47 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வாழைக்குளம் நிரம்பியது: தொடா் மழை காரணமாக மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து மறுகால் பாயும் தண்ணீா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் மற்றும் திருமாலை வணங்கி கண்மாய்களுக்கு செல்கிறது. இந்தக் கண்மாய் கடந்த ஓராண்டில் மட்டும் 6 முறை நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT