விருதுநகர்

சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் 49- ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் திலகவதி ரவீந்திரன் தலைமை வகித்தாா். சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் 1,045 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

உயா் கல்வி பெற்றுள்ள நீங்கள் புதிய தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளில் ஆா்வம் காட்ட வேண்டும். ஓய்வு நேரங்களில் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நீங்கள் எந்தப் பணியில் இருந்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடனும், ஆா்வத்துடனும் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி வரவேற்றாா். விழாவில், கல்லூரிச் செயலா் அருணாஅசோக், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ். மகேஸ்வரன், ப்ரீத்தி வசீகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT