விருதுநகர்

கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளி நியமிக்க கோரிக்கை

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாளையம்பட்டி, கோவிலாங்குளம், ராமானுஜபுரம், தொட்டியான்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு 30-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் உள்ளன. ஆனால் இரவு நேரத்தில் 2 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இங்கு இரவு நேரக் காவலாளி இல்லாததால், கடந்த 2 ஆம் தேதி இரவு இளைஞா் ஒருவா் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரிடம் தகராறு செய்துள்ளாா். எனவே இந்த சுகாதார நிலையத்துக்கு இரவு நேர காவலாளி, மருத்துவ அலுவலரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT