விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகள் கடத்தல்: தந்தை மீது வழக்கு

7th Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

 ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்ாக தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைத் தலைவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஜெகன் (22). இவா் கோவிந்தன் நகா் காலனியைச் சோ்ந்த லேமினா (20) என்பவரை காதலித்து அக்டோபா் 3-ஆம் தேதி திருமணம் செய்தாா். பின்னா் வத்திராயிருப்பு நோக்கி தம்பதியா் சென்ற போது, வ. புதுப்பட்டி விலக்கு அருகே லேமினாவின் தந்தை பாண்டியன், வலுக்கட்டாயமாக மகளை கடத்திச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரில் வத்திராயிருப்பு போலீஸாா் பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT