விருதுநகர்

வங்கி, ஊராட்சி மன்ற செயல்பாடுகள்: இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்குப் பயிற்சி

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்கு வங்கி, ஊராட்சி மன்றச் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டியில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்கள்

செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு வங்கியின் செயலா் கணேசன், மாணவா்களுக்கு வங்கியின் செயல்பாடுகள், படிவங்களை நிரப்புவது குறித்து விளக்கினாா்.

இதன்பின்னா் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன், மாணவா்களை வரவேற்று ஊராட்சி மன்றப் பணிகள் குறித்தும், பொதுமக்களின் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT