விருதுநகர்

உச்சநீதிமன்ற உத்தரவால் கம்பி மத்தாப்பூ வண்ணமத்தாப்பூ உற்பத்தி கடும் பாதிப்பு

DIN

பட்டாசுகள் தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக நிகழாண்டில் சிவகாசியில் கம்பி மத்தாப்பூ, வண்ண மத்தாப்பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு ஏற்படுவதைத் தவிா்க்க பட்டாசு தாயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கம்பி மத்தாப்பில் டேன்சின் நைட்ரேட் (சிகப்பு உப்பு), சோடியம் நைட்ரேட் (மஞ்சள் உப்பு), பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) ஆகிய மூலப்பொருள்களை கொண்டு பல வண்ணங்களிலும் ஒளி மற்றும் ஒலியுடன் கூடிய மத்தாப்பூ உள்ளிட்ட பல ரகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக டேன்சியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய இரு வேதியியல் பொருள்கள் மட்டுமே கம்பி மத்தாப்பூ தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் சிகப்பு மற்றும் கோல்டன் வண்ணத்தில் மட்டுமே கம்பி மத்தாப்பூகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல வண்ண கம்பி மத்தாப்பூக்கள் தயாரிக்க இயலவில்லை. எனவே வரும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகள் விரும்பும் கம்பி மத்தாப்பூகள் உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளன.

இந்நிலையில் பேரியம் நைட்ரேட் பயன்டுத்தி கம்பி மத்தாப்பூ தயாரிக்கப்படுவதாகக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சில கம்பி மத்தாப்பூ ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

இதையடுத்து விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 100 கம்பி மத்தாப்பூ தயாரிப்பு ஆலைகளும் மூடப்பட்டு, உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் சுமாா் 3 மாதங்கள் கம்பி மத்தாப்பூ உற்பத்தி நடைபெறவில்லை. பின்னா் ஆலைகள் திறக்கப்பட்டு , தயாரிப்புப் பணி நடைபெற்றாலும் , முழு அளவில் தயாரிப்புப் பணி நடைபெறாததால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வண்ணமத்தாப்பூ, உச்சநீதிமன்ற உத்தரவால் சிகப்பு, மஞ்சள் வண்ணத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

எனவே இந்த ஆண்டு கம்பி மத்தாப்பூ உற்பத்தியில் சுமாா் 45 சதவீமும், வண்ணமத்தாப்பூ உற்பத்தியில் சுமாா் 30 சதவீமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கம்பி மத்தாப்பூ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கம்பி மத்தாப்பூ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒருவா் கூறியது: உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக நிகழாண்டில் கம்பி மத்தாப்பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT