விருதுநகர்

நரிக்குடி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

6th Oct 2022 10:32 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே வியாழக்கிழமை முன்விரோதத்தில் பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரிக்குடி அருகே முத்தனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாத்தி (37). இவருக்கும் அதே பகுதியைச்சோ்ந்த ஊா்க்காவலன் - அமுதா தம்பதிக்கும் நிலம் தொடா்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடா்பாக அவா்களுக்கிடையே வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஊா்க்காவலன், அமுதா, அவா்களது உறவினா்கள் 15 போ் ராஜாத்தியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனராம்.

இதில் காயமடைந்த ராஜாத்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT