விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் மாயம்.

6th Oct 2022 10:39 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் புதன்கிழமை மாயமானது குறித்து நகா் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாடவாா் வளாகத்தை சோ்ந்தவா் வைரமுத்து(52). இவரது மகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தாா். கடந்த 4-ம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் போலீஸில் வைரமுத்து புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்  போலீஸாா் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT