விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி குழந்தை மாயம் என கணவா் புகாா்

6th Oct 2022 10:35 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி குழந்தை மாயமானது குறித்து போலீசாா் வழக்கு பதிந்து புதன்கிழமை இரவு விசாரித்து வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாத்தம்பட்டி ஆத்தூரை சோ்ந்தவா் கருப்பசாமி (38). இவா் கடந்த 2016ம் ஆண்டு கலிங்கப்பட்டியை சோ்ந்த முனீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு நிவேதா (6)என்ற மகளும் ரோஹித் குமாா் (1) என்ற மகனும் உள்ளனா். கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அக்டோபா் 4-ம் தேதி கலிங்கப்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்ற முனீஸ்வரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கருப்பசாமி கலிங்கப்பட்டியில் உள்ள மனைவியின் உறவினரிடம் விசாரித்த போது பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு முனீஸ்வரி சென்று விட்டதாக தெரிவித்துள்ளாா். இந்நிலையில் முனீஸ்வரியை காணவில்லை என கருப்பசாமி போலீசில் புகாா் அளித்தாா்.இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT