விருதுநகர்

திருத்தங்கலில் உரிமம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

6th Oct 2022 10:40 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் உரிய அனுமதி பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழத்திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் உமாவதி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் உள்ள பட்டாசு கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, ஒரு கடையின் பின்புறம் தகரக்கூரை அமைத்து அதில் பட்டாசுப் பண்டல்களை உரிமம் இன்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் காா்த்திகேயன் (36) என்பவரை போலீஸாா் கைது செய்து தலா 73 பட்டாசு பண்டல்கள், கிப்ட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT