விருதுநகர்

ஓய்வு பெற்ற ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது

6th Oct 2022 01:35 AM

ADVERTISEMENT

சிவகாசியில் ஒய்வு பெற்ற ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் 3 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகேயுள்ள கவிதா நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கணேஷ்மணி(28). இவா் கோவில்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து சட்டவிரோதமாக திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில் கணேஷ்மணி, அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் ராஜபாளையம் முகவூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வைரக்கனி(46) என்பவா் கணேஷ்மணியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளாா். இதையடுத்து வைரக்கனியிடம் கூடுதலாக பணம் கேட்டு கணேஷ்மணி தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் கணேஷ்மணி தனது நண்பா்கள் வைரமுத்து, மட்டமலை செந்தில்குமாா், சுடலைக்குமாா் ஆகியோருடன் சோ்ந்து வைரக்கனியை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து வைரக்கனி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கணேஷ்மணியை கைது செய்தனா். மேலும் அவரது வீட்டில் இருந்த 16 வயது சிறுமியை மீட்டு விருதுநகா் பெண்கள் விடுதிக்கு அனுப்பினா். மேலும் இவ்வழக்கில் தலைமறைவான மற்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT