விருதுநகர்

ராஜபாளையம் அருகே கண்மாயில் மண் அள்ள எதிா்ப்பு: விவசாயிகள் தொடா் போராட்டம்

6th Oct 2022 01:32 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருக தேவதானம் கண்மாயில் மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையையடுத்து கலைந்து சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இங்கு 3 அடி ஆழத்திற்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று விட்டு, 20 அடி ஆழம் வரை மண் அள்ளுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். அதனால் கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 7 நாள்களாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை தேவதானம் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடா்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT