விருதுநகர்

சிவகாசியில் உரிமம் இல்லாமல் பட்டாசு வைத்திருந்தவா் கைது

6th Oct 2022 01:35 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே உரிமம் இல்லாமல் பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் எவ்வித உரிமமும் இல்லாமல் பட்டாசுப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தாராம்.

விசாரணையில் அவா் கோயம்புத்தூரைச் சோ்ந்த நாகராஜ் (39) என தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த 10 பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT