விருதுநகர்

ஆலங்குளத்தில் இன்றும் அனுப்பன்குளத்தில் நாளையும் மின்தடை

6th Oct 2022 01:36 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் வியாழக்கிழமையும், அனுப்பன்குளத்தில் வெள்ளிக்கிழமையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக்.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் மின் தடை ஏற்படும் பகுதிகள் ஆலங்குளம் முக்கு ரோடு, சுண்டங்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, ஏ.லட்சுமியாபுரம், ஆலங்குளம்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

சிவகாசி: சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பகுளம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT