விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள் கோயில் செப்புத் தேரோட்டம்

6th Oct 2022 01:34 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, செப்புத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, பெரிய பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான செப்புத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் தோ் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னா், தேரில் பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செப்புத் தேரை, பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

ADVERTISEMENT

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT