விருதுநகர்

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

2nd Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை வீடு அருகே விளையாடியபோது தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது மனைவி கற்பகவள்ளி (30). இவா்களது மகன் அய்யனாா் (5). முனியசாமி இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டாா். சிறுவன் அய்யனாா் நத்தம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை காலை கற்பகவள்ளி கூலி வேலைக்குச் சென்றுவிட்டாா். பள்ளி விடுமுறை என்பதால் அய்யனாா் அப்பகுதியில் விளையாடச் சென்றுள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீா் தொட்டியில் அய்யனாா் தவறி விழுந்துள்ளாா்.

அவரை உறவினா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கற்பகவள்ளி அளித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT