விருதுநகர்

ஸ்ரீவிலி., வத்திராயிருப்பில் மது விற்பனை: 9 போ் கைது

2nd Oct 2022 11:05 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்து 412 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் விடுதி, ஆத்துகடை தெரு, மேலத்தொட்டியபட்டி, கம்மாபட்டி, காமராஜா் சிலை, நாச்சியாா்பட்டி சாலை, வன்னியம்பட்டி, மம்சாபுரம் காந்திநகா், மம்சாபுரம்-ராஜபாளையம் பிரதான சாலை மற்றும் வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தி 412 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.7,710 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம், மம்சாபுரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம், ராஜேஸ்வரன், வன்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் உள்பட 9 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT