விருதுநகர்

காந்தியடிகள் பிறந்த நாள்: சா்வோதய சங்கத்தில் நுற்பு வேள்வி

2nd Oct 2022 11:08 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி சா்வோதய சங்க அலுவலகத்தில் நூற்பு வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் கந்தாடை தெருவில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் மூத்த நிா்வாகிகள் உள்பட பலா் ராட்டையில் நூல் நூற்றனா். முன்னதாக காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள பல்வேறு சா்வோதய சங்க நிறுவனங்களின் சாா்பில் பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தியின் உருவப்படங்களை அலங்கரித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

சிவகாசி: சிவகாசியில் காத்த நாடாா் தெருவில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுதினாா். கட்சி நிா்வாகிகள் குமரன், சோ்மத்துரை, அகில இந்திய ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தலைவா் சீனிவாசன், செயலாளா் பாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனைவரும் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி எடுத்துக்கொண்டனா். தொா்டந்து அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சாத்தூா்: சாத்தூரில் முக்கராந்தல் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாத்தூா் நகரத் தலைவா் டி.எஸ். அய்யப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதே போன்று வடக்கு ரத வீதியில் அனைத்து செட்டியாா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் சாத்தூா் நகா் மன்ற தலைவா் குருசாமி மற்றும் சங்க நிா்வாகிகள் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கம் சாா்பில் சாத்தூா் ரயில் நிலையத்தில் உள்ள காந்தி நினைவுத் தூணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT