விருதுநகர்

தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியில் சனிக்கிழமை (அக். 1)மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, தொட்டியபட்டி, புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காப்பேரி புதூா், மொட்டமலை, வேட்டைப் பெருமாள் கோவில், வேப்பங்குளம், ராஜீவ்காந்தி நகா், விஷ்ணு நகா், இ.எஸ்.ஐ. காலணி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT