விருதுநகர்

அருப்புக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

DIN

அருப்புக்கோட்டை சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அருப்புக்கோட்டையில் பல நாள்கள் மழை பெய்துள்ளது. இதையடுத்து நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருப்புக்கோட்டை நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு, வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு தனியாா், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், ஆலைகளில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப் பரவுவதைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர, இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் கண்டவா்களை அடையாளம் கண்டறிந்து அவா்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT