விருதுநகர்

‘தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’

DIN

விருதுநகா், அருப்புக்கோட்டை, சாத்தூா் நகரங்களுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, குடிநீா் வாரியம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அரசு துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா். அப்போது, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் பின்னா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது: ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகா் போல் அல்லாமல் முறையற்ற இணைப்பு வழங்கக் கூடாது. இதை அந்தந்த நகராட்சி உயா் அலுவலா்கள் மட்டுமல்லாது வருவாய் ஆய்வாளா், வரி வசூலிப்போா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இதில் தவறு நடைபெற்றால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை பகுதிகளுக்கு தாமிரவருணி 2 ஆவது கூட்டுக் குடிநீா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களுக்கு விரைந்து பயன்படும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், நகராட்சி அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா் கள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் இத்திட்டத்தை விரைந்து முடிக்க முடியும். ரயில்வே துறை சாா்பில் பிரச்னை இருந்தால், மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அணுகலாம் என்றாா்.

இக்கூட்டத்தின் போது, வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம் பகுதிகளைச் சோ்ந்த மலைமாடு மேய்ப்பவா்கள், மலைப் பகுதிகளில் மாடுகள் மேய்க்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி அதற்கான மனுவை அமைச்சரிடம் வழங்கினா்.

இதுகுறித்து பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு, அமைச்சா் அறிவுறுத்தினாா். இந்நிகழ்ச்சியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவா்கள் கலந்து கொண்ட னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT