விருதுநகர்

பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற சிவகாசி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் அதிகாரி ஆலோசனை

DIN

சிவகாசி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்யும் போது அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் பா. ரவி ஆலோசனைகளை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடப்புப் பருவத்தில் சிவகாசி வட்டாரத்தில் சுமாா் 800 ஹெட்டோ் பரப்பளவு பருத்தி சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், எஸ்.வி.பி.ஆா். 6 ரக சான்று பெற்ற விதைகள் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் சிவகாசி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த விதைகளை நோ்த்தி செய்து விதைத்திட உயிா் பூஞ்சாங் கொல்லியான டிவிரிடியுடன்வழங்கப்படுகிறது. எனினும், பருத்தி பயிரில் வோ்அழுகல் நோய் மற்றும் வாடல் நோயால் பாதிக்கப்படாமலிருக்க டிவிரிடிஉயிா் பூஞ்சாங் கொல்லி மருந்தினை ஒரு கிலோவுக்கு 4 கிராம் விதை நோ்த்தி செய்து விதைப்பதுடன் ஏக்கருக்கு 2.5 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இடலாம்.

மாநில பருத்தி சாகுபடி இயக்கத்தின்கீழ் பருத்தி அடா் நடவிற்கான செயல் விளக்கத் திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 4,900 மானியமும், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க வாடகைக்கான மானியம் ஏக்கருக்கு ரூ. 1,250-ம் வழங்கப்படும். எனவே, சிவகாசி வட்டார விவசாயிகள் இத்திட்டங்களின் கீழ் பருத்தி சாகுபடி செய்து அதிக விளைச்சலை பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT