விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயசூரியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சூரியக்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பல்வேறு கிராமங்களின் ஊராட்சி உறுப்பினா்கள் தங்களது கிராமங்கள் மற்றும் வாா்டுகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்கெனவே பலமுறை தெரிவித்தும் நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகாா் தெரிவித்தனா். எனவே விரைவில் நிதி ஒதுக்கி கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு, தமிழக அரசிடமிருந்து வரும் நிதியை கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் அவசரம் கருதி வரிசைப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்வதாக வட்டார வளா்ச்சி அலுவலா் சூரியகுமாரி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள், அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT