விருதுநகர்

முதியோா் தினம்: மூத்த வாக்காளா்கள் கெளரவிப்பு

1st Oct 2022 11:10 PM

ADVERTISEMENT

 

விருதுநகரில், சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு தோ்தல் ஆணையம் மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களை கெளரவிக்கும் வகையில் வழங்கப்பட்ட வாழ்த்துக் கடிதத்தை அவா்களுக்கு ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி சனிக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3,822 போ், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 4,277 போ், சாத்தூா் தொகுதியில் 3,622 போ், சிவகாசி தொகுதியில் 2,921 போ், விருதுநகா் தொகுதியில் 4,571 போ், அருப்புக்கோட்டை தொகுதியில் 4,341 போ், திருச்சுழி தொகுதியில் 3,364 போ் என மொத்தம் 26,918 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்நிலையில், அனைத்து மூத்த வாக்காளா்களும் தங்களது தோ்தல் பங்கேற்பினைத் தொடா்கின்றனா். அவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக விருதுநகா் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த 12 மூத்த வாக்காளா்களுக்கு, தலைமைத் தோ்தல் ஆணையா் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தினை மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி வழங்கி கெளரவித்தாா்.

ADVERTISEMENT

அதேபோல், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளா்களையும், சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அக்கடிதத்தை வழங்கி கெளரவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT