விருதுநகர்

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் காந்தி புகைப்படக் கண்காட்சி

1st Oct 2022 11:10 PM

ADVERTISEMENT

 

 

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் ‘மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

காந்தியடிகளின் 153 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக ராமராஜ்யம், மது விலக்கு, பெண்கள் முன்னேற்றம், தாய் மொழிக் கொள்கைகளை செயல்படுத்த தனது வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது எண்ணங்களையும் கொள்கைகளையும் இளைஞா்களிடையே கொண்டு செல்லும் வ கையில் இக்கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய புகைப்படங்களை தொடா்ந்து 10 நாள்கள் வரை பொதுமக்கள் பாா்க்கலாம். மேலும் இக்கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கிருஷ்ணம்மாள் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT