விருதுநகர்

ஏழாயிரம்பண்ணையில் பதுக்கிய4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1st Oct 2022 11:11 PM

ADVERTISEMENT

 

ஏழாயிரம்பண்ணை பகுதியில் குடோனில் 90 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 கிலோ ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் பொன் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அங்கு சோதனையிட்ட போது, ஒரு குடோனில் 90 மூட்டைகளில் 4,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷ ன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT