விருதுநகர்

அருப்புக்கோட்டைமலையரசன் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

1st Oct 2022 11:09 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டையடுத்து மலையரசன் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மலையரசன் சுவாமிக்கும், ஆஞ்சனேயருக்கும் மற்றும் குன்றின் மீதுள்ள வரதராஜப்பெருமானுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடாழ்வாா் வாகனத்தில் மலையரசன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT