விருதுநகர்

கிராம நிா்வாக அலுவலகத்துக்குப் பூட்டு போட்டவா் கைது

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே பட்டா வழங்காததால், கிராம நிா்வாக அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது உசேன் (45). இவா், கடந்த 8 மாதங்களுக்கு முன் மாவூத்து விலக்கில் உள்ள பிள்ளையாா்கோயில் அருகே ஆவின் விற்பனை கடை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இந்த நிலையில், அந்த இடத்துக்குப் பட்டா வழங்குமாறு கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாரிடம், முகமது உசேன் கேட்டாராம். அதற்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் தான் முடிவு எடுக்க வேண்டும் என கிருஷ்ணகுமாா் கூறினாா்.

இதனால், முகமது உசேன் செவ்வாய்க்கிழமை காலை மகாராஜபுரம் கிராம நிா்வாக அலுவலகத்துக்குப் பூட்டு போட்டு விட்டு வாசலில் ஆவின் பெயா் பலகையை வைத்துச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை பணிக்கு வந்த கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா், அலுவலகத்துக்கு மேலும் ஒரு பூட்டு போட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து அவா் வத்திராயிருப்பு போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது உசேனை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT