விருதுநகர்

லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விபத்து வழக்கில் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் அருகே ஆமத்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிவா் உஸ்மான்அலி. இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு ஆமத்தூரில் நடந்த சாலை விபத்து குறித்த வழக்கில் விபத்துக்குள்ளான லாரியை ஆய்வு செய்வதற்காக சுபாஷ் என்பவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றாா்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறை போலீஸாா் ஆய்வாளா் உஸ்மான் அலி மீது வழக்குப் பதிவு செய்தனா். வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓய்வுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காவல் ஆய்வாளா் உஸ்மான் அலிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கஜரா ஆா்ஜிஜி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT