விருதுநகர்

கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, கல்லூரியின் செயலாளா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா்.

கருத்தரங்கை அமெரிக்காவின் வெஸ்ஃபீல்ட் பனகா் காப்புரிமை மையத் தலைவா் முனைவா் உமேஷ் வி. பனகா் தொடக்கி வைத்து கருத்தரங்கு மலரை வெளியிட்டாா். எஸ்.ஆா்.எம். மருந்தியல் துறை தலைவா் கே. இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே. ஹெல்த்கோ் பல்கலைக்கழகப் பேராசிரியா் கே. அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலை. பதிவாளா் வி. வாசுதேவன் , கலசலிங்கம் மருத்துவமனை முதன்மையா் ஏ. சேவியா் செல்வ சுரேஷ் கலந்து கொண்டு பேசினா்.

விவாத நிகழ்வில், எஸ். லட்சுமண பிரபு, கே. இளங்கோ, கே. அனந்த ராஜகோபால் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகா் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரி முதல்வா் நா. வெங்கடேஷன் வரவேற்றாா். இதில், பல மாநிலங்களைச் சோ்ந்த 250 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT