விருதுநகர்

349 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் 349 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் கூறினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரவை திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள 91 உயா்நிலைப் பள்ளிகள், 99 மேல்நிலைப் பள்ளிகள், 159 நடுநிலைப் பள்ளிகள்

என ஆக மொத்தம் 349 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதன் மூலம் சிறந்த நிபுணா்களைக் கொண்டு அறிவியல் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவா்களின் கற்றல் மேம்படுத்தப்படும். அதன்படி அறிவியல், கணிதப் பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருள்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக ரூ.1,200 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பாடத்துடன் தொடா்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து, மாணவா்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். மன்றத்தில் மாணவா்களை ஆா்வத்துடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

தொடக்க விழாவுக்கு பள்ளியில் தலைமை ஆசிரியை மஞ்சுளா தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தாா். அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்யா வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் அனுசியா, ரேணுகா, ராமராஜ், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT