விருதுநகர்

ராஜபாளையம் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை 2-ஆவது சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ர யாகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகை நறுமணப் பொருள்களால் அபிஷேக ஆராதனைகளும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT