விருதுநகர்

மீன் வெட்டிப் பாறை அருவிக்கு நீா்வரத்து

28th Nov 2022 12:05 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மீன் வெட்டிப் பாறை அருவியில் நீா்வரத்து ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில், மினி குற்றாலம் என்று அழைக்கப்படும் மீன் வெட்டிப் பாறை அருவியில் கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் தண்ணீா் வரத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பின்னா், அங்கு உள்ள அழகா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். வெளியூா்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT